சட்டப்பேரவை தேர்தல்: அ.தி.மு.க.வில் இன்று ஒரே கட்டமாக நேர்காணல்.!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று ஒரே கட்டமாக நேர்காணல் நடைபெறுகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று ஒரே கட்டமாக நேர்காணல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் விருப்பமனுவை விநியோகம் செய்து வந்தது. அந்த வகையில் அதிமுக சார்பில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் வந்துள்ளதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று ஒரே கட்டமாக நேர்காணல் நடைபெறுகிறது. இதனால் இன்று ஒரே நாளில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.