திமுகவை அழகிரி அழிப்பார்.. தனக்கு நம்பிக்கை இருக்கிறது.. எச்.ராஜா பேட்டி.!

திமுகவை அழகிரி அழிப்பார்.. தனக்கு நம்பிக்கை இருக்கிறது.. எச்.ராஜா பேட்டி.!

Update: 2020-11-19 19:17 GMT

விழுப்புரத்தில் பாஜக சார்பில் வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் இருக்கின்ற இந்து விரோத தீய சக்திகள் திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் கூட்டணியை வேரோடும் வேரடி மண்ணோடு களைந்தெடுப்பதற்காக மக்கள் மத்தியிலே விழுப்புணர்வை ஏற்படுத்துவதற்கான யாத்திரைதான் இந்த வெற்றிவேல் யாத்திரை.

இந்து பெண்களை எல்லாம் விபச்சாரிகள் என்று பேசினார் திருமாவளவன். தமிழக அரசு இன்று வரைக்கும் திருமாவளவனை கைது செய்த பாடில்லை. ஆகவேதான் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யாத்திரைத்தான் இது என்றார்.

மேலும், மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார். ஆலோசனை செய்து அவர் நல்ல முடிவை எடுப்பார். தீயசக்தியான திமுகவை அழிக்கின்ற நல்ல முடிவினை கண்டிப்பாக அவர் எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News