அழகிரியின் அழைப்பு - தென் தமிழக தி.மு.கவில் விழப்போகும் பெரிய இடி!

அழகிரியின் அழைப்பு - தென் தமிழக தி.மு.கவில் விழப்போகும் பெரிய இடி!

Update: 2020-12-25 15:47 GMT

தமிழக அரசியல் உலகில் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கொள்கை ரீதியாகவும், நடவடிக்கை ரீதியாகவும் எதிராக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவார்கள்.

ஆனால் உடன்பிறந்த அண்ணணே இவர் இனியும் சரிபட்டு வரமாட்டார் என அறிந்து தனது அரசியல் பயணத்தை அறிவிப்பதாக இருப்பது தி.மு.க'வில் மட்டுமே. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களை எதிர்த்து அரசியல் மு.க.அழகிரி அரசியல் பாதையில் பயணிக்க துவங்கியுள்ளார்.

தி.மு.க'வில் இருந்து முறையான அழைப்பும், ஆதரவான நிலையும் வரவில்லை என மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தனது தனியான அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக அறிக்க போவதாக செய்திக வெளிவந்த நிலையில் வரும் ஜனவரி 3'ம் தேதி தனது ஆதரவாளர்களை மதுரையில் அழகிரி கூட சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையானது, "வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனைக் கூட்டம் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்" என தனது சார்பில் மு.க.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து அழகிரியின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் அழகிரி தனியாக அரசியலை பயணத்தை முன்னெடுக்கும் பட்சத்தில் அது ஏற்கனவே உட்கட்சி மோதலில் தத்தளித்துகொண்டிருக்கும் தி.மு.க'விற்கு பெரிய அடியாக விழும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News