பள்ளியை திறந்து வைக்க உத்தரவு.. வெப்கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் திட்டம்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக வாக்கு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

Update: 2021-03-19 05:32 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக வாக்கு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு செய்து வருகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனுத்தாக்கலுக்கு அதிகமானோர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைதொடர்ந்து வேட்புமனு பரிசீலனை செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்யும்.

இந்நிலையில், வாக்குச்சாவடி அமைய இருக்கும் பள்ளி வளாகங்களைத் திறந்துவைக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். வாக்குச்சாவடிகளில் கேமரா பொருத்தும் பணி நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாளில் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் இருப்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த பணிகளை செய்து வருகிறது.

மேலும், பள்ளிகள் திறந்திருப்பதை உறுதி செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News