கரூரில் ரூ.2.93 லட்சம் ரூபாய் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி.!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சாலையில் தடுப்பு அமைத்து பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Update: 2021-03-03 07:13 GMT

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், சாலையில் தடுப்பு அமைத்து பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் மாவட்டம், பரமத்தி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.2.93 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த பணத்தை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Similar News