கால்நடை தீவன ஊழல்: லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்!

Update: 2022-02-21 09:39 GMT

பீகார் முன்னாள் முதலமைச்சராக லாலு பிரசாத் இருந்தார். இவரது ஆட்சியின்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் பல நூறு கோடி ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்படி அவர் ஏற்கனவே 4 வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே சில மாதங்கள் சிறையில் கழித்த லாலுவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதனை காரணம் காட்டி தற்போது ஜாமீனில் இருந்து வருகிறார். இதில் தற்போது லாலு பிரசாத் யாதவ் மீது 5வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவித்தது, இதில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இது தவிர ரூ.60 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. விரைவில் இதற்காகவும் சிறைக்க செல்ல நேரிடலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News