அண்ணாமலை ஐபிஎஸ் எச்சரிக்கை.. மிரண்ட ஐந்து கட்சி அமாவாசை.. கரூரில் கோ பேக் மோடி வாசகம் அழிப்பு.!
அண்ணாமலை ஐபிஎஸ் எச்சரிக்கை.. மிரண்ட ஐந்து கட்சி அமாவாசை.. கரூரில் கோ பேக் மோடி வாசகம் அழிப்பு.!
தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும்பொழுது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக சுவர் விளம்பரம் செய்வது பலூன் விடுவது போன்ற தீய காரியங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது.
அதே போன்று கரூர் மாவட்டத்திலும் திமுக எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தலைமையில் சுவர் விளம்பரம் எழுதினர். அதில் தமிழகத்திற்கு வரவேண்டாம், கோ பேக் மோடி என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மோடி பற்றி எழுதிய விளம்பரங்களை அழிக்க வேண்டும் என்று பாஜக துணைத்தலைர் அண்ணாமலை ஐபிஎஸ் எச்சரிக்கை செய்திருந்தார். அரசியல் செய்ய வேண்டும் என்றால் மக்களிடம் நேரடியாக சென்று போட்டி போடுங்கள், யாருக்கு மக்கள் ஆதரவு தருகிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகம் என கூறினார்.
மேலும், ஒரு வாரத்திற்குள் சுவர் விளம்பரங்களை அழிக்கவில்லை என்றால் அதே இடத்தில் ஐந்து கட்சி அமாவாசை என்று எழுதப்படும் என்று கூறியிருந்தார்.
இவரது எச்சரிக்கையை தொடர்ந்து கரூரில் உள்ள ஒரு சுவர் விளம்பரத்தை திமுகவினர் உடனடியாக அழித்துள்ளனர்.
இது பாஜக துணைத்தலைவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அம்மாவட்டத்தினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இனிமேலும் இது போன்ற விளம்பரங்களை எழுதினால் கடுமையான விளைவுகளை திமுகவினர் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.