வேளாண் சட்ட நன்மைகள்.. இன்று முதல் விவசாயிகளை சந்திக்கும் பாஜக நிர்வாகிகள்.!
வேளாண் சட்ட நன்மைகள்.. இன்று முதல் விவசாயிகளை சந்திக்கும் பாஜக நிர்வாகிகள்.!
தமிழகம் முழுவதும் வேளாண் சட்ட நன்மைகளை விளக்கி விவசாயிகளிடம் பாஜக சார்பில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை குழப்பி வருகிறது. 3 வேளாண் சட்டங்களும் நன்மை அளிக்காது என்று திசை திருப்பி வருகின்றனர்.
இதன் எதிரொலிதான் டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தூண்டி வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தமிழக பாஜக தலைவர்கள் மாவட்ட வாரியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்து இருப்பதாக ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் மாநில தலைவர் எல்.முருகன், காரைக்குடியில் எச்.ராஜா, ஓசூரில் மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன் ஆகியோர் சந்திக்கிறார்கள்.
நாளை (12-ம் தேதி) தஞ்சாவூரில் மாநில துணைத்தலைவர் முருகானந்தமும், நெல்லையில் நயினார் நாகேந்திரனும் கோவையில் விவசாய பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜீம் சந்திக்கிறார்கள். நாளை மறுநாள் (13-ம் தேதி) முன்னாள் எம்.பி. நரசிம்மன் சேலத்திலும், சுப.நாகராஜன் ராமநாதபுரத்திலும், கரு.நாகராஜன் வேலூரிலும் சந்திக்கிறார்கள்.
14-ம் தேதி (திங்கள்) நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென்காசியில் குப்புராமு ஆகியோர் சந்திக்கிறார்கள்.