உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் 67 மாவட்டங்களை கைப்பற்றி பா.ஜ.க. சாதனை: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வி.!

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.

Update: 2021-07-05 02:20 GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.

அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்பான ஜிலா பஞ்சாயத்து (மாவட்ட கவுன்சிலர்) தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.


 



இதில் 75 இடங்களில் 67 இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி வெறும் 5 இடங்களை மற்றும் கைப்பற்றியது. மற்ற ஒரு சில கட்சிகள் தலா ஒரு இடங்களையும் பிடித்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.


 



அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் பார்க்கப்படுகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என உள்ளாட்சித் தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News