பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

Update: 2021-03-14 12:29 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.




 


 


அதிமுக, பாமக, திமுக கட்சிகள் வேட்பாளர் வெளியிடப்பட்ட நிலையில், பாஜகவும் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


 



அதன்படி பாஜக வேட்பாளர் பட்டியலை டெல்லியில் இன்று மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன்ரெட்டி மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங், ஆகியோர் கூட்டாக முதற்கட்டமாக 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டிலை வெளியிட்டனர்.

அதன்படி,

1. தாராபுரம் - எல்.முருகன்

2. அரவக்குறிச்சி - அண்ணாமலை

3. காரைக்குடி - எச்.ராஜா

4. கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

5. ஆயிரம் விளக்கு - குஷ்பு

6. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

7. நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

8. துறைமுகம் - வினோஜ் பி.செல்வம்

9. திருவண்ணாமலை - எஸ்.தணிகைவேல்

10. திருக்கோவிலூர் - கலிவரதன்

11. மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி

12. திட்டக்குடி (தனி) - பெரியசாமி

13. திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்

14. மதுரை வடக்கு - டாக்டர் சரவணன்

15. விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன்

16. ராமநாதபுரம் - குப்புராம்

17. குளச்சல் - பி.ரமேஷ்

Similar News