புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்: பா.ஜ.க. தலைமை அதிரடி உத்தரவு!

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக பல்வேறு மாவட்டங்களுக்கு தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-11-12 12:42 GMT

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக பல்வேறு மாவட்டங்களுக்கு தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜகவில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியல் விவரம் வருமாறு: மதுரை டாக்டர் பி.சரவணன் முன்னாள் எம்.எல்.ஏ., திருச்சி நகர் எஸ்.ராஜசேகரன், திருச்சி புறநகர் ஆர்.அஞ்சா நெஞ்சன், கரூர் வி.செந்தில்நாதன், பெரம்பலூர் பி.செல்வராஜ், விழுப்புரம் ஏ.டி.இராஜேந்திரன், செங்கல்பட்டு ஏ.வேதா சுப்பிரமணியம், கோயம்புத்தூர் வடக்கு திருமதி சங்கீதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.


அதே போன்று மாவட்ட பார்வையாளர்களாக, திருச்சி நகர் லோகிதாஸ், இராமநாதபுரம் ஜி.பி.எஸ். நாகேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக, கே.கே. சீனிவாசன் மதுரை நகர், ஏ.ராஜேஷ்குமார் திருச்சி நகர், சி.இராஜேந்திரன் திருச்சி புறநகர், கே.சிவசாமி கரூர், சி.சந்திரசேகரன் பெரம்பலூர், வி.ஏ.டி.கலிவரதன் முன்னாள் எம்.எல்.ஏ., விழுப்புரம், வி.பலராமன் செங்கல்பட்டு, வி.பி.ஜெகன்நாதன் கோயம்புத்தூர் வடக்கு, சேது அரவிந்த் திருச்சி புறநகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News