பா.ஜ.க., பெண் எம்.எல்.ஏ., கொரோனாவால் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்.!

பா.ஜ.க., பெண் எம்.எல்.ஏ., கொரோனாவால் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்.!

Update: 2020-11-30 11:52 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகம், கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ., கிரண் மகேஷ்வரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான உதய்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்படுகிறது.

எம்.எல்.ஏ., கிரண் மகேஷ்வரி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். மாநில முன்னேற்றம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதற்கு எம்.எல்.ஏ., கிரண் மகேஷ்வரி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Similar News