காவல்துறை அதிகாரி மீது கமிஷ்னர் அலுவலகத்தில் பா.ஜ.க. பெண் நிர்வாகி புகார்!
பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கட் மீது காவல்துறை அதிகாரி அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கட் மீது காவல்துறை அதிகாரி அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமனை எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து உள்ளனர். கைது செய்வது பற்றி கேட்க சென்ற பெண் நிர்வாகியான சுமதி வெங்கட்டிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். இது பற்றிய வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பாஜக நிர்வாகி கைது குறித்து கேட்க சென்ற பெண் நிர்வாகி மீது காவல்துறை அதிகாரி ஒருவர் தவறாக நடந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி இன்று (அக்டோபர் 19) சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கட் வழக்கறிஞர் பிரிவுகள் உடன் சென்று புகார் அளித்தார். புகார் மனுவில் காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளேன் என்று பெண் நிர்வாகி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். காவல்துறை அதிகாரியின் செயலால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியது மட்டுமின்றி உடல்ரீதியான பாதிப்பையும் சந்திக்க நேரிட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
Source, Image Courtesy: Bjp Tamilnadu Twiter