அதிமுக, திமுகவுக்கு நிகராக வளர்ந்த பா.ஜ.க.. உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்.!
அதிமுக, திமுகவுக்கு நிகராக வளர்ந்த பா.ஜ.க.. உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்.!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரையில் மக்களின் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. தற்போது அதிமுக மற்றும் திகவுக்கு போட்டியாக பாஜக வளர்ந்துள்ளது என மாநில உளவுத்துறை அரசுக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளது.
வேல் யாத்திரையை பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கடந்த 6ம் தேதி திருத்தணியில் துவங்கிய போது அவர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.க., தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கமாக தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் செல்வாக்கு பெற்ற மாவட்டங்களை தவிர பிற இடங்களில் மிகவும் குறைந்த அளவான அதாவது 100க்கும் குறைவானவர்களே கைதாவது வழக்கம்.
ஆனால் வேல் யாத்திரை விவகாரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கைது எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருந்தது. குறிப்பாக கரூரில் 120 பேர் சேலத்தில் 400 பேர் நாமக்கல்லில் 200 பேர் என அனைத்து மாவட்டங்களிலும் சராசரி கைது 100ஐ தாண்டியுள்ளது. கடந்த காலத்தில் பா.ஜ.க., பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் 500 பேர் வந்தாலே போலீசார் மிகவும் ஆச்சரியத்துடன் பார்ப்பர். ஆனால் தற்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. இதற்கு வேல் யாத்திரைதான் முழுக்க காரணம் என உளவுத்துறை சார்பில் சொல்லப்படுகிறது.
யாத்திரை பொதுக்கூட்டங்கள் நடந்த கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் என சராசரியாக 100 பேர் முதல் 2000 பேர் வரை பங்கேற்று 500 பேர் முதல் 1000 பேர் வரை கைதாகி உள்ளனர்.
கூட்டம் கூடியதன் பின்னணி குறித்து உளவுதுறை அரசின் பார்வைக்கு அளித்த அறிக்கை: இந்து அமைப்புகள் தொடங்கிய 20:20 எனும் திட்டத்தால் பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கூட்டங்களில் பா.ஜ.க நிர்வாகிகள் மட்டுமின்றி இந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் கோவில்களில் பூஜை நடத்துபவர்கள் பங்கேற்று வருகின்றனர். இதன் காரணமாகத்தான் தற்போது பா.ஜ.க.வில் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் பா.ஜ.க பிரதிநிதிகள் முகவர்களாக இருந்து வந்தனர். ஆனால் வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பா.ஜ. சார்பில் முகவர்கள் இடம்பெற நிர்வாகிகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.