சுயேட்சையாக போட்டியிட்டவர் எப்படி பா.ஜ.க. வேட்பாளர் ஆவார்! பத்திரிகையாளர்களுக்கு COMMON SENSE இருக்கா: சீறிய அண்ணாமலை!
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று (அக்டோபர் 12) தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஆளும் திமுக அரசு அதிகாரிகளை வைத்துக்கொண்டு போலியான வெற்றியை பெற்றுக்கொண்டதாக அனைத்து கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.;
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று (அக்டோபர் 12) தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஆளும் திமுக அரசு அதிகாரிகளை வைத்துக்கொண்டு போலியான வெற்றியை பெற்றுக்கொண்டதாக அனைத்து கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதே போன்று கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் 7வது கிராம ஊராட்சி வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கார்த்தி என்பவர் சுயேட்சையாக களம் கண்டு ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார். அதனை தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பாஜக சார்பில் போட்டியிட்டவர் ஒரு வாக்கு மட்டுமே வாங்கியுள்ளார் என்று தவறான செய்திகளை பரப்பியது.
இதனை மறுக்கும் விதமாக கார்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் நான் 9வது வார்டை சேர்ந்தவர் என்றும், எனது குடும்பத்தினரின் வாக்கு மற்றும் என்னுடைய வாக்கும் 9வது வார்டிலேயே உள்ளது. இதனால் யாரும் வாக்களிக்கவில்லை. இதனை ஊடகங்கள் பெரிது படுத்தி செய்தி வெளியிட்டு வருகிறது. இது போன்று போலியான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு வாக்கு மட்டுமே பாஜக வேட்பாளர் எடுத்துள்ளார் என்ற கேள்வியை முன்வைத்தனர். அப்போது அவர் பேசும்போது, ஊடகங்களுக்கு காமன் சென்ஸ் இருக்கா என்று கேட்டார். ஒருவர் சுயேட்சையாக போட்டியிட்டவர் எப்படி பாஜக வேட்பாளராக ஆவார். இது ஒரு பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு எப்படி தெரியவில்லை என்று காட்டமாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் விடியல் ஆட்சி குடுக்கும் ஸ்டாலின் ஏன் அனைத்து இடங்களிலும் 100 சதவீத வெற்றியை பெற முடியவில்லை. அங்கு பாஜக மற்றும் அதிமுக 30 முதல் 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. எனவே ஏன் நீங்கள் 100 சதவீத வெற்றியை பெறவில்லை என்று ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப தைரியம் இருக்கிறதா என்று பத்திரிகை மற்றும் ஊடகத்தினரிடம் காட்டமான பதிலை அளித்தார்.
Source, Image Courtesy: Twitter