மின் வாரியத்தில் முறைகேடு: தி.மு.க. அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை!
மின் வாரியத்தில் முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று திமுக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் @rajbhavan_tn நமது தலைவர்களுடன் சந்தித்து சில பிரச்சனைகள் குறித்து விளக்கியும், ஆளும் திமுக அரசு அனைத்து விதிகளையும் மீறி சமீபத்திய மின் திட்டத்தில், ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பது குறித்து ஒரு குறிப்பை வழங்கினோம்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 21, 2022
- மாநில தலைவர் திரு.@annamalai_k pic.twitter.com/aS0f82653i
தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின்திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பேப்பரில் இயங்கும் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் பயந்துபோன திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று கெடு விதித்தார். ஆனால் அதனை மீறி சில ஆதாரங்களை சமூக வலைதளம் மூலமாக அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர். அதன் பின்னர் ஆளுநர் ரவியுடன் திமுக அரசு மீதான புகார் பட்டியலை அண்ணாமலை வழங்கினார். விரைவில் திமுகவுக்கு இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்கலாம் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Twiter