பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தபால் வாக்குகளில் முன்னிலை
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவர் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் (மே 2) இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவர் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார்.
அதே போன்று மற்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களும் அமைச்சர்களும் முன்னிலை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.