அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் கோவை புறக்கணிக்கப்படுகிறதா.. முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.!

கோவை மாவட்டம் மட்டும் புறக்கணிக்கப் படுவதாகவும், கோவை மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் வென்றதால் புறக்கணிக்கபடுகிறதா என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

Update: 2021-06-23 10:47 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், கோவை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் அரசு புறக்கணித்து வருகிறது என அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். தேர்தலில் அதிமுகவுக்கு அதிகமான எம்.எல்.ஏ.க்களை கொங்குமண்டலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில், கோவை மாவட்டம் மட்டும் புறக்கணிக்கப் படுவதாகவும், கோவை மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் வென்றதால் புறக்கணிக்கபடுகிறதா என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புறக்கணிக்கப்படவில்லை எனவும், கோவை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதற்கு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News