இரண்டு சக்கர வாகன மானியம்! தமிழக அரசுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை!

பெண்கள் இரண்டு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-25 05:58 GMT

பெண்கள் இரண்டு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் வெளியே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இரண்டு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மாநில அரசு நிறுத்தியுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உழைக்கின்ற மகளிருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் முன்னேற்றம் என்பது அவர்கள் சுயமாக முடிவெடுப்பது யாரையும் சார்ந்திராமல், அவர்களின் பணியை அவர்களே மேற்கொள்வது. இதற்கு அடிப்படையாக இருப்பது அவர்கள் யாருடைய உதவியும் இன்றி தங்கள் பணியை மேற்கொள்ள தாங்கள் சொந்தமாக வாகனங்களை இயக்குவது.

மேலும், பெண்கள் வாகனங்கள் வாங்க வழங்கப்படும் மானியத்தை நிறுத்துவது வாகனத்திற்கான மாநிய நிறுத்தம் அல்ல. பெண்களுக்கான இரண்டு சக்கர வாகனம் அவர்களுக்கு இறக்கைகளாக மாறியுள்ளது. எனவே இத்திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: Bjp

https://www.dinamalar.com/news_detail.asp?id=2830311

Tags:    

Similar News