கொரோனா தொற்றால் மத்திய பிரதேச பாஜக எம்.பி. நந்த்குமார் மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்.!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த கந்த்வா தொகுதி பாஜக எம்.பி., நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த கந்த்வா தொகுதி பாஜக எம்.பி., நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நந்த்குமார் சிங் சவுகான், குருகிராமில் உள்ள ஒரு தனியார் அனுமதிக்கப்பட்டு, தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவு பாஜகவுக்கு மிகப்பெரிய இழப்பு என்று அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக எம்.பி நந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், "கந்த்வா தொகுதியைச் சேர்ந்த எம்.பி., நந்த்குமார் சிங் சவுகான் மறைந்ததில் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூரப்படுகிறார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.