பா.ஜ.க.வுக்கு கருப்பு, சிவப்பு மட்டுமல்ல அனைத்து நிறங்களும் தேவை: அண்ணாமலை!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாஜக சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்திப்பில் கூறியதாவது:;
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பாஜக சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்திப்பில் கூறியதாவது:
-தமிழக அரசு கேட்டிருக்கும் வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த கட்டமாக தமிழகத்துக்கும் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
மேலும், எஸ்டி.ஆர்.எஃப் என்று சொல்லப்படும் மாநில பேரிடர் நிதிக்கு தாம் தலையிட்ட பின்னரே மாநில அரசின் 25 சதவிகிதமான 300 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறினார். அது மட்டுமின்றி கருப்பு, சிவப்பு, நீலம் நிறம் மட்டுமில்லை அனைத்து நிறங்களும் பாஜகவுக்கு தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்து எங்களை எதிர்த்தாலும் தோற்கடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi