பிரதமர் மோடி மீதான விமர்சனத்திற்கு ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க!
ராகுல் காந்தி மந்த புத்தி கொண்டவர். காங்கிரஸ் கட்சிக்கு அவர்தான் அபசகுணம் என்று பா.ஜனதா கூறியுள்ளது.;
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி என்றால் அபசகுணம் என்று அர்த்தம் என்று கூறினார் . உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண பிரதமர் மோடி சென்றதால் தான் இந்திய அணி தோற்றுது என்று மறைமுகமாக குற்றம் சாட்டினார்.அதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் ராகுல் காந்திமன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் நேற்று பா.ஜ.க சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் வி.டி.வி சர்மா நிருபர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர் பிரதமர் மோடிக்கு எதிராக இத்தகைய கருத்தை தெரிவித்ததன் மூலம் ராகுல் காந்தி தனது மந்த புத்தியை காண்பித்துள்ளார். அவர் 1330 கோடி மக்களை இழிவுபடுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழந்திருப்பதற்கு ராகுல் காந்தியும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளுமே முக்கிய காரணம் இவ்வாறு அவர் கூறினார். இதுபோல் அரியானா மாநில உள்துறை மந்திரியும் பா.ஜனதா மூத்த தலைவருமான அனில்விஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராகுல்காந்தி விரக்தியின் உச்சிக்கு சென்று விட்டார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு அபசகுணம் பிடித்தவர். அவர் காங்கிரஸின் முகமாக உருவெடுத்ததில் இருந்தே அக்கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. அதில் ஒரு அணி வெற்றி பெறும் அல்லது தோல்வி அடையும். அதை விளையாட்டு வீரர் மன உணர்வுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI