இணைய வழியில் பா.ம.க., சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்.. ஜி.கே.மணி அறிவிப்பு.!

இணைய வழியில் பா.ம.க., சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்.. ஜி.கே.மணி அறிவிப்பு.!

Update: 2020-12-22 17:04 GMT

டிசம்பர் 31ம் தேதி இணைய வழியில் பா.ம.க., சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், 2020ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2021ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் டிசம்பர் 31ம் தேதி நடைபெறுகிறது.

31.12.2020 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறவுள்ள புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர் என கூறப்பட்டுள்ளது.
 

Similar News