தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெற வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல் !

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் என்று மதுரை மாவட்ட பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2021-11-30 06:28 GMT
தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெற வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல் !

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் என்று மதுரை மாவட்ட பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் மதுரை மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.சரவணன் கூறியதாவது: மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துகின்றபோது பேனர்களில் முதலமைச்சர் படம் இடம் பெறுகிறது. எனவே அதே போன்று பிரதமர் மோடியின் புகைப்படமும் தமிழக அரசு அலுவலகங்களில் இடம் பெற பாஜக விரும்புகிறது. இதனை நாங்கள் திமுகவிடம் முறையிடவில்லை, தமிழக அரசிடம்தான் வலியுறுத்துகிறோம்.

எனவே அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசின் பங்களிப்பு இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் முதலமைச்சரின் படத்துடன் பிரதமர் படத்தை பயன்படுத்த நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News