தமிழை சுவாசித்தவர்.. நேசித்தவர்.. அண்ணா நினைவு நாளில் துணை முதலமைச்சர் உருக்கமான ட்விட்.!
தமிழை சுவாசித்தவர்.. நேசித்தவர்.. அண்ணா நினைவு நாளில் துணை முதலமைச்சர் உருக்கமான ட்விட்.!
இன்று பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தில் அதிமுகவினர் அண்ணாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதே போன்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.