புதிய கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிக்க முடியுமா? மு.க.ஸ்டாலினின் குதர்க்கமான கேள்வி.!
புதிய கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிக்க முடியுமா? மு.க.ஸ்டாலினின் குதர்க்கமான கேள்வி.!
காஞ்சிபுரம் மாவட்ட குன்னத்தில் கிராம சபைக் கூட்டம் தி.மு.க., சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி வருகின்றார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், 24 மணி நேரத்தில் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க முடியுமா என்று யாரை கேள்வி கேட்கிறார் என்றால், நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதம் 31ம் தேதி புதிய கட்சி ஆரம்பிக்கின்றார் என கூறியிருந்தார். ஒரு வேளை ரஜினியைதான் ஸ்டாலின் பேசி வருகின்றாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.