மின்வாரிய புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி!

மின்சார வாரியத்தின் மீது வைக்கப்பட்ட புகாருக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update: 2021-10-22 12:28 GMT

மின்சார வாரியத்தின் மீது வைக்கப்பட்ட புகாருக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், வித்தியாலயம் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது அவர் மின்வாரிய புகார் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது அவர் பேசும்போது, மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது எனவும், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் எனவும் கூறினார்.

திமுக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் இருந்தால் பொது வெளியில் ஆதாரத்தை வெளியிடலாம் என்று கூறியிருந்தார். அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த அரை மணி நேரத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் வாயிலாக 4 சதவீதம் கமிஷன் செல்கிறது என்ற குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Polimer

Image Courtesy: Twiter




 


Tags:    

Similar News