பா.ஜ.க தலைவர் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு CBI காவல்.!

பா.ஜ.க தலைவர் கொலை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு CBI காவல்.!

Update: 2020-11-05 19:53 GMT
வியாழக்கிழமை காலை, 2016 இல் கொலை செய்யப்பட்ட முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் யோகீஷ் கௌடா கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் கர்நாடக அமைச்சரும் மற்றும் காங்கிரஸ் தலைவருமான வினய் குல்கர்னியை CBI காவலுக்கு எடுத்து தார்வாட் பகுதியில் வைத்து CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வினய் குல்கர்னி மாநிலத்தில் முன்னாள் சித்தராமையா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிக்கையின் படி, வினய் குல்கர்னி மற்றும் அவரது சகோதரர் விஜயா குல்கர்னியை அவரது இல்லத்தில் வைத்து CBI காவலில் எடுத்து தார்வாட் பகுதி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைக் காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரது தம்பி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

2016 இல் ஜிம்மில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட பா.ஜ.க வின் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் யோகீஷ் கொலை செய்யச் சதி செய்ததாக குற்றச்சாட்டை அடுத்து முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். வினய் குல்கர்னி மற்றும் சிலரை பா.ஜ.க குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யச் சதி திட்டம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

பா.ஜ.க தலைவரின் சகோதரர் குருநாத்கௌடா இந்த வழக்கை CBI விசாரணைக்கு மற்ற கோரியிருந்தார். இந்த வழக்கை முடிக்கக் கோரி பல உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தன்னை அச்சுறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் இந்த வழக்குக்குத் தேவையான ஆதாரங்களை அழிக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு எதிரான விசாரணையை CBI எடுத்து நடத்த பா.ஜ.க தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். கொலை வழக்கை CBI க்கு மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் மறுத்த நிலையில், பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் விசாரணையை CBI க்கு மாற்றியது.

Similar News