சென்னையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.. எதிர்க்கட்சித் தலைவர் யார்.?
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
அதற்காக இன்று மாலை 4.30 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் ஒருவரை எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக தேர்வு செய்வார்கள் என கூறப்படுகிறது.