சமூக வலைதளத்தில் யார் என்ன சொன்னாலும் தி.மு.கவை ஏன் வெளுக்குறீங்க - மனுஷ்யபுத்திரன் குமுறல்.!

சமூக வலைதளத்தில் யார் என்ன சொன்னாலும் தி.மு.கவை ஏன் வெளுக்குறீங்க - மனுஷ்யபுத்திரன் குமுறல்.!

Update: 2020-10-21 15:32 GMT

சமூக வலைதளத்தில் ஒரு காலத்தில் தி.மு.க தனி ராஜாவாக வலம் வந்தது, தி.மு.கவை சேர்ந்தவர்களை கூறும் கருத்துக்கள் அனல் பறக்கும், அவர்களின் விவாதங்கள் மோதல்களை உருவாக்கும், எந்த விவாதமாயினும் தி.மு.க'வினர் தனியாக தெரிவார்கள். இப்படி கெத்தாக வலிய வந்த தி.மு.க சமூக வலைதள மக்கள் தற்பொழுது அடிதாங்கும் இடிதாங்கிகளாக மாறி யார் என்ன கூறினாலும் அடி வாங்குவது தி.மு.க'வை சேர்ந்த நபராக இருக்கும் சூழ்நிலையாக நிலைமை மாறிவிட்டது.

தி.மு.கவை பற்றி உடன்பிறப்புகள் பேசினாலே வாயில் 'பட்' என்று அடிவிழுகிறது. "பன்றது தி.மு.க'விற்கு சப்போர்ட் இதுல யோக்கியன் மாதிரி பேச்சு வேற" என எந்த கட்சியையும் சேராத சமூக வலைதள வாசிகளே தி.மு.க உடன்பிறப்புகளை ஒரு காட்டு காட்டி விடுகின்றனர்.

இந்த உண்மையை தி.மு.க ஐடி விங்க் ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே மனுஷ்யபுத்திரன் என்கின்ற எஸ்.அப்துல் ஹமீது தெரிந்து கொண்டார். இதனை தனது சமூக வலைதள பதிவில் 'யார் என்ன சொன்னாலும் ஏன்யா தி.மு.க'காரனை போட்டு பொளக்குறீங்க?' என்கிற ரேஞ்சில் புலம்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஜய சேதுபதியின் மகள் குறித்து வக்கிரமாக எழுதுகிறவன் அஜித் படத்தை ப்ரஃபைல் படமாக வைத்திருப்பதாலேயே அவன் அஜித் ரசிகனாகிவிடமாட்டான், அதற்கு அஜித் பொறுப்பல்ல, அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற வாதத்தை முழுமையாக ஏற்கிறேன். அதேபோல "அந்த நபர் விஜய் சேதுபதியை தாக்குவதாலேயே அவன் ஈழ ஆதரவாளரோ தமிழ் தேசியவாதியாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை!

இதற்காக எங்களைத் தாக்காதீர்கள் என்ற வாதத்தையும் ஏற்கிறேன்.ஆனால் தி.மு.க ஆதரவாளர்களாக தங்களை கூறிக்கொள்ளும் சிலர் வரம்புமீறி தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் தி.மு.கவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவை எங்கள் கருத்துக்களும் அல்ல என்று நாங்கள் சொன்னால் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? யார் எதை எதை மோசமாக எழுதினாலும் 'இது தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணியினர் வேலை' என்றும், கட்சித்தலைமை மன்னிப்புகேட்க வேண்டும் என்றும் அடாவடி செய்வது எதற்காக? நீங்கள் எந்த நியாயத்தை கோருகிறீர்களோ அதை முதலில் மற்றவர்களுக்கு வழங்குங்கள்" என்று கூறியுள்ளார்.

Similar News