விஜயதசமியில் ரஜினிகாந்த் கட்சி தொடக்கமா?

விஜயதசமியில் ரஜினிகாந்த் கட்சி தொடக்கமா?

Update: 2020-10-22 13:43 GMT

விஜயதசமி'யில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடுகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இதுபற்றி சில விவரங்களை விசாரித்த பொழுது கிடைத்தவை.

"நான் அரசியலுக்கு வருவது உறுதி" என ரஜினி அவர்கள் முழங்கிய போதே நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிட போவதில்லை 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிட போகிறோம் என்ற அறிவிப்பையும் சேர்த்துதான் வெளியிட்டார். பின்னர் அதுபற்றி ஆயிரமாயிரம் விமர்சனங்கள், செய்திகள், வதந்திகள், கட்டுக்கதைகள் போன்றவை மீடியாக்களிலும், மற்ற கட்சிகளாலும், ரசிகர்கள் மத்தியிலும், மக்களின் மத்தியிலும் பேசப்பட்டன.


ஆனாலும் ரஜினி அவர்கள் அதன் பிறகு நடந்த ஒரு விழாவில் நமது அரசியல் தூய்மையான ஆன்மீக அரசியல் விருப்பு, வெறுப்பின்றி நேர்மையான அரசியலாக இருக்கும் என்றார். பின் இன்னொரு விழாவில் "நான் முதலமைச்சர் கிடையாது, அதற்கு திறமையான ஆட்களை நிறுத்துவேன்" என்றார். அவரின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல வழக்கமான கரைவேட்டி அரசியல் செய்பவர்கள் மத்தியிலும் விவாத பொருளாகின. இப்படி தனது அரசியல் வருகையை நிறுத்தி, நிதானமாக ஒவ்வோரு அடியாக எடுத்து வைக்கும் நேரத்தில் கொரோனோ தொற்று நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ள படும் பொழுது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இதனால் ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்தியும், அவரின் கட்சி மற்றும் இதர அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் ரஜினி பொது வெளியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும், தனது அரசியல் பிரவேச நடவடிக்கைகள் மற்றும் அதன் அஸ்திவாரங்களை பலமாக நிறுவிதாக தகவல்கள் வருகின்றன.


கட்சியின் கொள்கைகள், வேட்பாளர்கள், கொடி, நிர்வாகிகள், கூட்டணி கட்சிகள் போன்ற அஸ்திவாரத்தை ரஜினி அவர்கள் கடுமையான உழைப்பை கொட்டி கட்டமைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் விஜயதசமி அன்று தன்து கட்சி பற்றி அறிவிப்பையும் அதன் சம்மந்தமான வீடியோ'வையும் வெளியட உள்ளதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் வீடியோ ஏனென்றால். தற்பொழுது கொரோனோ காலகட்டம் இதில் மாநாடு, சிறப்பு கூட்டங்கள் போன்ற மக்கள் கூடுமாறு உள்ள அரசியல் நடவடிக்கைகள் பெரும் வினையை ஏற்படுத்தும் எனவும், இது மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் எந்தவித தொந்தரவு ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் ரஜினி அவர்கள் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே தற்பொழுது அரசியல் அறிவிப்பு பற்றி வீடியோவை வெளியிடுவதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் தேர்தல் வேளை நெருங்க நெருங்க இன்னும் பல வீடியோக்களில் மக்களின் தேவைகள், மாற்று அரசியல், அவர் எதிர்பார்ப்பது போல் சிஸ்டம் சரி செய்தல், ஆன்மீக அரசியலின் தெளிவு, ஏன் சமதர்ம அரசியலின் தேவை போன்றவைகள் மக்களுக்கு வீடியோ வடிவில் எளிமையாக புரியவைக்கும். மேலும் கொரோனோ நெருக்கடி நிலவி வரும் வேளையில் மக்களை பொதுக்கூட்டம், மாநாடு போன்று சிரமம் ஏற்படுத்தாமலும் இருக்கும் என்பது ரஜினி தரப்பு திட்டமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பார்க்கலாம் 25 ஆண்டுகால தமிழக மக்களின் எதிர்பாரப்பு வரும் விஜயதசமியில் நிறைவேறுமா என்று?

Similar News