தசரா கொண்டாட்டத்தில் மோடி உருவ பொம்மை எரிப்பு - நட்டா கண்டனம்!
தசரா கொண்டாட்டத்தில் மோடி உருவ பொம்மை எரிப்பு - நட்டா கண்டனம்!
பஞ்சாப்பில் நேற்று நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின் போது காங்கிரசார் மாநில நிர்வாகிகளின் முன்னிலையிலேயே பிரதமர் மோடியின் உருவ பொம்மையை இராட்சசன் போல சித்தரித்து அதை நாடு வீதியில் தீ வைத்து கொளுத்தினர். இது சாலையில் சென்ற பொது மக்களையும், மாநில பா.ஜ.க-வினரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதுமிருந்து பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் தனது ட்விட்டர் பதிவில், 'மகனின் பொய்கள், கோபம், ஆதங்கம் மற்றும் வெறுப்பு அரசியலின் போராட்டங்கள் அம்மாவின் ஜனநாயகம் மற்றும் கண்ணியத்தின் போயான பேச்சுக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பெரிய அளவிலான உருவப் பொம்மையை எரிக்கும் ராகுல் காந்தியின் இயக்கத்தில் நடைபெற்ற இந்த நாடகம் அவமானகரமானது.
நேரு வம்சாவளியினர் ஒருபோதும் பிரதமரை மதிப்பது இல்லை. 2004-2014-ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது வலிமையற்ற பிரதமரை நடத்திய விதத்தைப் பார்த்தோம். ஒரு கட்சி தொடர்ச்சியாக அருவருக்கத்தக்க நிகழ்வுகைள நடத்துகிறது என்றால் அது காங்கிரஸ்தான்.
அவர்கள் ஆட்சி மற்றும் செய்யவில்லை. அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கின்றனர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிரதமரான ஒருவர் மீது ஒரு வம்சம் ஆழ்ந்த தனிப்பட்ட வெறுப்பைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து சொல்லும் பொய்களும் வெறுப்பு பேச்சுகளும் நரேந்திர மோடி அவர்களுக்கான மக்கள் ஆதரவை மேலும் அதிகரிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.