உத்திர பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம் - வெளியேறிய பிரியங்கா காந்தியின் நெருங்கிய தோழியும் மூத்த தலைவருமான அனு!

உத்திர பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம் - வெளியேறிய பிரியங்கா காந்தியின் நெருங்கிய தோழியும் மூத்த தலைவருமான அனு!

Update: 2020-10-29 20:25 GMT

உன்னாவ் தொகுதி முன்னாள் எம்.பி-யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அனு டாண்டன் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். தனது இரண்டு பக்க விலகல் கடிதத்தில் காங்கிரஸ் தலைமையை சரமாரியாக தாக்கியுள்ளார் அனு டாண்டன்.

இவர் காந்தி குடும்பத்திற்கு, குறிப்பாக பிரியங்கா வாத்ரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த கள அரசியல்வாதியான இவர் உத்திர பிரதேசத்தில் நிலவி வரும் மந்தமான காங்கிரஸ் தலைமையால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் சமாஜ்வாதி கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மட்டுமின்றி பல மூத்த தலைவர்கள் உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுவதால் காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Similar News