போக்சோ சட்டத்தின் கீழ் கிருஸ்துவ பாதிரியார் கைது - எல்லாம் கிருபை.. கிருபை..!

போக்சோ சட்டத்தின் கீழ் கிருஸ்துவ பாதிரியார் கைது - எல்லாம் கிருபை.. கிருபை..!

Update: 2020-10-30 09:21 GMT

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் கிருஸ்துவ மதபோதகர்கள் பாலியல் புகாரில் ஈடுபடுவது தொடர்ச்சியாகி வருகிறது. இதனால் கிருஸ்துவத்தை நம்பி செல்லும் பெண்கள் பாதிக்கப்பட்டு எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் 11 வருடமாக தொடர் பாலியல் தொந்தரவு செய்வதாக 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பெயரில் மத போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள ஸ்க்ரிப்ட்சர் யூனியன் என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்தார் சாமுவேல் ஜெய்சுந்தர், இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தனக்கு நன்கு அறிமுகமான போதகரான சாமுவேல் ஜெய்சுந்தர் என்பவர் இஸ்டாகிராம், மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து தனக்கு ஆபாச படங்களை அனுப்பியும் பேசியும் தொல்லை செய்து வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் தான் போத்தனூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 6 ஆம் வகுப்பு படிக்கின்ற போது அங்குள்ள மாணவிகளுக்கு பைபிள் போதனை வகுப்பு எடுப்பதற்கு வந்த போது அறிமுகமான சாமுவேல் ஜெய்சுந்தர். அன்றிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை சூழ் நிலைக்கு ஏற்ப தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னரும் அவரது பழக்கத்தை துண்டித்த நிலையில் முகநூல் மூலமும், அதனை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் மூலமும் சாமுவேல் ஜெய்சுந்தர் தொடர்ந்து ஆபாசமாக பேசுதல் ஆபாச படங்களை அனுப்புவது என்று தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும் அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சாமுவேல் ஜெய்சுந்தரை விசாரணைக்கு அழைத்த போலீசார். கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளியில் படிக்கும் போது அத்துமீறி நடந்து கொண்டதாற்காக 9 வருடம் கழித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாமுவேல் ஜெய்சுந்தர் சிறையில் அடைக்கப்பட்டார். கிருஸ்துவ மதபோதகர்களின் மீது புகார்கள் முக்கியமாக பாலியர் புகார்கள் அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.

Similar News