பா.ஜ.கவின் 'வேல் யாத்திரை' தொடங்கும் முன்னரே நடுங்கும் திருமாவளவன் - முகத்திரை கிழிவதால் தடை செய்ய அறிக்கை.!

பா.ஜ.கவின் 'வேல் யாத்திரை' தொடங்கும் முன்னரே நடுங்கும் திருமாவளவன் - முகத்திரை கிழிவதால் தடை செய்ய அறிக்கை.!

Update: 2020-10-30 16:08 GMT

தமிழக பா.ஜ.க சார்பில் நவம்பர் 6ம் தேதி முதல் "வேல் யாத்திரை" தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மற்ற கட்சிகள் பா.ஜ.க வளர்ந்து வரும் நிலையில் இந்த 'வேல் யாத்திரை' கண்டிப்பாக பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமாக உதவும் என்று நினைப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், "பாஜக சார்பில் நவம்மர்-06 முதல் தொடங்கி நடத்தப்படவுள்ள 'வேல் யாத்திரை' தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே, இதற்குத் தமிழக அரசு அனுமதியளிக்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என அறிக்கை வெளியிட்டுள்றார்.

கடந்த சில தினங்கள் முன்பு திருமாவளவன் இந்து சமுதாய பெண்கள் விபச்சாரிகள் என்ற ரீதியில் பேசிய விவகாரத்தை இந்துக்கள் சார்பாக பா.ஜ.க களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் திருமாவளவன் சென்ற இடத்தில் கருப்பு கொடி காட்டுவது மற்றும் தமிழகத்தில் அனேக பகுதிகளில் இந்து பெண்கள் புடைசூழ பா.ஜ.க போராட்டம் நடத்தியது.

இதில் திருமாவளவன் மற்றும் அவர் சார்ந்த கட்சியினரின் இந்து சமுதாய மக்களின் மீது கொண்ட வெறுப்பு சம்மந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. மற்ற மதங்களை வளர்க்கவே மறைமுகமாக திருமாவளவன் இந்து மதத்தை எதிர்க்கிறார் என்ற உண்மையும் இந்து சமுதாய மக்களுக்கு பா.ஜ.க போராட்டத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்பட்டது.

இதுவரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியல் எனவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் எனவும் போலி அரசியல் செய்து வந்த திருமாவளவன் முகத்திரை கிழிக்கப்படதில் திருமாவளவன் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க சார்பில் 'வேல் யாத்திரை' நடத்தப்பட்டால் இந்து சமுதாய மக்களிடம் திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள் காட்டும் வெறுப்பு அரசியல் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாகிவிடும் என்ற எண்ணத்தில் இந்த 'வேல் யாத்திரையை' தடை செய்ய முயற்சிக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News