கனிமொழி தேர்தல் பொறுப்புக்கு வேண்டாம் என முட்டுக்கட்டை போடும் உதயநிதி.!
கனிமொழி தேர்தல் பொறுப்புக்கு வேண்டாம் என முட்டுக்கட்டை போடும் உதயநிதி.!
தி.மு.க'வில் நடக்கும் உட்கட்சி பூசல்களை விட கனிமொழி Vs ஸ்டாலின் குடும்பம் பூசல்கள் தான் அதிகமாக உள்ளது. எங்கே கனிமொழி அரசியலில் உதயநிதியை ஓரம்கட்டிவிடுவாரோ என பயந்து ஸ்டாலின் குடும்பம் கனிமொழியை ஓரம்கட்ட நினைக்கிறது.
இந்த நிலையில் தி.மு.க'வின் தென் மண்டல பொறுப்பாளராக கனிமொழி நியமிக்கப்படுவதற்கு உதயநிதி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அறிவாலயத்தின் மூத்த தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க மக்கள் மத்தியில் அவப்பெயர் எடுத்துள்ள நிலையில் தேர்தலை சந்திக்கிறோம் இந்த நிலையில் இது போன்ற காழ்ப்புணர்ச்சிகளால் தி.மு.க சட்டமன்ற தேர்தலில் தோற்கும் நிலைக்கு தள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் உதயநிதியால் தி.மு.க'விற்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஐ-பேக் நிறுவனம் கூறியதால் அவருக்கு முக்கியத்துவத்தை குறைக்க தி.மு.க இரண்டாம் கட்ட மூத்த தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் 2021 தேர்தலில் பெண்களின் வாக்கு தி.மு.க'வின் வெற்றிக்கு முக்கியமானதாக கருதப்படும் நிலையில் பெண்கள் ஆதரவைப்பெற கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். இதனால் தான் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி இருப்பதால் அவரை தென்மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கலாம் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்த நிலையில் அதற்கு தான் உதயநிதி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இப்படி உள்ளடி வேலைகள் மற்றும் உட்கட்சி பூசல்களால் ஏற்கனவே தடுமாறும் கப்பலாக சென்று கொண்டிருக்கும் தி.மு.க இதை நிலை நீடித்தால் கண்டிப்பாக தரைதட்டிய கப்பலாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.