ஆட்சியை பிடிக்க தேனி போன்று செயல்படனும்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட முதலமைச்சர்.!
அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேனிக்கள் போன்று செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேனிக்கள் போன்று செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 2வது கட்ட பிரச்சாரத்தை சேலத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். தேர்தல் சமயத்தில் எந்த தொய்வும் இருக்கக் கூடாது. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க தொண்டர்கள் அனைவரும் தேனீக்களை போன்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.