முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

Update: 2021-03-20 06:45 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.




 


இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 



அதே போன்று சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News