குப்பையை ஏன் எடுக்கவில்லை: கோவையில் தி.மு.க. கவுன்சிலரை தாக்கிய இளைஞர்!
கோவை 20வது வார்டு பகுதியில் குப்பை எடுக்காததை கண்டித்து திமுக கவுன்சிலரை இளைஞர் ஒருவர் தாக்கியுள்ளார்.
கோவை 20வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மரியராஜ். இவர் வசிக்கும் பகுதியான கணபதி கே.கே.நகர் பகுதியில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. இதனிடையே ஒரு தொழில் நிறுவனத்திடம் மரியராஜ் மல்லுக்கட்டியுள்ளார். அதாவது ஏன் அதிகமான குப்பை போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் தொழில் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கவுன்சிலரை தாக்கியுள்ளார். ஏன் இத்தனை நாட்கள் ஆகியும் குப்பை எடுக்கவில்லை என்று வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இளைஞரை கைது செய்த போலீசார் இருவரும் சமாதானமாக போக முடிவு செய்து இளைஞரை விடுவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பும் சமாதானம் போவதற்கு முக்கிய காரணம் தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர் ஆளும் கட்சி பிரமுகரின் உறவினர் என கூறப்படுகிறது.
Source, Image Courtesy: Vikatan