கோவையில் கமல் போட்டியிட்டாலும் பா.ஜ.க. வெற்றி பெறும்: தமிழக தலைவர் எல்.முருகன்.!
கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டாலும், பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டாலும், பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கோவை தெற்கு தொகுதியில் கடந்த தேர்தலின்போது தனித்து நின்ற வானதி சீனிவாசன் 36 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார் என கூறினார்.
தற்போது அந்த தொகுதியின் வேட்பாளர் அதிமுகவை சேர்ந்தவர். இந்த சூழ்நிலையில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்குகிறது. எனவே யார் போட்டியிட்டாலும் கோவை தெற்கு தொகுதியில் தங்களது கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.