கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.!

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது: 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகள் இன்று முதல் வீடுகளுக்கே சென்று பெறப்படுகிறது.

Update: 2021-03-25 07:53 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி விரைவில் சட்டமன்ற தேர்தல் வரஉள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் என்று நடமாட்டம் அதிகளவு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது: 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகள் இன்று முதல் வீடுகளுக்கே சென்று பெறப்படுகிறது.


 



சென்னையில் சுமார் 7 ஆயிரத்து 300 பேர் தபால் முறையில் வாக்களிக்க உள்ளனர். அவர்களிடம் உள்ள வாக்குகளைப் பெறுவதற்கு 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புடன் சென்று வாக்களிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News