வன்னியர்கள் பற்றி விமர்சனம்.. திமுக எம்.பி.யை விரட்டி விரட்டி அடித்த பாமகவினர்.. ரூமில் தஞ்சம் புகுந்த பரிதாபம்.!
வன்னியர்கள் பற்றி விமர்சனம்.. திமுக எம்.பி.யை விரட்டி விரட்டி அடித்த பாமகவினர்.. ரூமில் தஞ்சம் புகுந்த பரிதாபம்.!
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற திமுக எம்.பி., செந்தில்குமாரை பாமகவினர் தடுத்து திருப்பி விரட்டியடித்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் பரப்புரை நடந்து வருகிறது. இதில் திமுக எம்.பி.செந்தில்குமார் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த சுப்ரமணியன் குடும்பத்தை சந்தித்து நிதியுதவி வழங்குவதற்காக நத்தமேடு கிராமத்திற்கு சென்றார்.
அங்கு சுப்பிரமணியின் நினைவு தூணுக்கு மரியாதை செலுத்த முற்பட்டபோது அங்கிருந்த பாமகவினர், செந்தில்குமாரை தடுத்து நிறுத்தினர். வன்னியர்கள் பற்றி தவறாக விமர்சனம் செய்துவிட்டு சுப்பிரமணியன் நினைவிடத்திற்கு எப்படி வரலாம் என பாமகவினர் ஏராளமானோர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், இங்கிருந்து திரும்பி சென்றுவிடுங்கள், நீங்கள் வன்னியர்களின் இனத்துரோகி என ஆவேசமாக பேசினர்.
இதனை பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயற்சித்த திமுக எம்.பி.,யை பாமகவினர் தாக்க முற்பட்டனர். இதனை அறிந்த போலீசார் எம்.பி.,யை அங்கிருந்து பத்திரமாக மீட்டு அருகாமையில் இருந்த அரசு கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். கட்டிடத்திற்குள் நுழைய விடாமல் பாமக தொண்டர் ஒருவர் கதவை இழுத்து மூடினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். இதன் பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து அறையில் விட்டு வெளிப்புறம் பூட்டினார்கள்.
மேலும், திமுக தொண்டர்களை பாமகவினர் விரட்டி விரட்டி அடித்தனர். எங்கள் இனத்துக்கு துரோகம் செய்துவிட்டு எப்படி இங்கே அழைத்து வரலாம் என ஆவேசம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மற்ற பாமகவினரிடையேயும் பதற்றத்தை உண்டாக்கியது.