தனுஷ்கோடியை பார்வையிட்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.!

கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்காக பரப்புரை மேற்கொண்டார்.

Update: 2021-04-01 05:09 GMT

தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்காக பரப்புரை மேற்கொண்டார்.




 


தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளை ஆதரித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை செய்து வருகிறார்.


 



இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரத்திற்கு சென்ற யோகி ஆதித்யநாத் வரலாற்று சிறப்பு மிக்க தனுஷ்கோடி கடற்கரையை பார்வையிட்டார். அவரது வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Similar News