வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம்.. தருமபுரியில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Update: 2021-03-20 06:28 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதில் முதன்மையானது கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. மாணவர்களிடம் விழிப்புணர்வு இருந்தால் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.




 


இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மாமரத்து பள்ளம் கலை அறிவியல் கல்லூரியில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் தாங்கினார்.

இதன் பின்னர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், வாக்களிப்பதற்கு பணம் அளித்தால் வாங்க மாட்டோம் என்றும், நேர்மையான முறையில் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Similar News