தருமபுரி: வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையை பார்வையிட்ட பா.ம.க. வேட்பாளர்.!
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார்.
தருமபுரியில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள், செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி காட்சியை பார்வையிட்டார்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அங்கிருந்த காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதே போன்று மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் செட்டிக்கரை கல்லூரிக்கு அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.