துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கேட்ட தே.மு.தி.க.!
அதிமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கு அமைச்சர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். பாமகவிற்கு 23 இடங்களை ஒதுக்கி அவர்களின் கூட்டணியை இறுதி செய்தது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கு அமைச்சர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். பாமகவிற்கு 23 இடங்களை ஒதுக்கி அவர்களின் கூட்டணியை இறுதி செய்தது.
அதே போன்று நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சு வார்த்தையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தினர். அப்போது பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை சற்று இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி உறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு தேமுதிக தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வேளை ஓபிஎஸ் உடன் கூட்டணி இறுதி செய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.