சென்னையில் பயங்கரம்: தே.மு.தி.க நிர்வாகி வெட்டிக் படுகொலை.!

சென்னையில் நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்த தேமுதிக பிரமுகர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-03-02 06:59 GMT

சென்னையில் நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்த தேமுதிக பிரமுகர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அனகாபுத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார் 36, இவர் தேமுதிகவில் நகர துணை செயலாளராக உள்ளார். அனகாபுத்தூரில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.

வழக்கம் போல நேற்று இரவு கடைக்கு வந்துவிட்டு மீண்டும் இரவு ராஜ்குமார் டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.


 



இதனிடையே ரத்த வெள்ளத்தில் அலரித்துடித்துக் கொண்டிருந்த ராஜ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது தேர்தல் தமிழகத்தில் அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News