100 நாள் வேலைக்கு வந்த பெண்களை மிரட்டி கிராம சபைக்கூட்டம் நடத்தும் தி.மு.க.,! இது ஒரு பொழப்பா என பொதுமக்கள் கேள்வி!
100 நாள் வேலைக்கு வந்த பெண்களை மிரட்டி கிராம சபைக்கூட்டம் நடத்தும் தி.மு.க.,! இது ஒரு பொழப்பா என பொதுமக்கள் கேள்வி!
திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் திமுக நடத்திய கிராம சபைக்கூட்டத்திற்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை மிரட்டி அழைத்து வந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சக்திபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி ஊராட்சியில் புதுப்பட்டி சமுதாயக்கூடம் அருகே திமுக நடத்திய கிராம சபை கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள்.
தங்களது வேலைக்காக சம்மட்டி, கொத்து, மண்சட்டி, சாப்பாட்டு பையுடன் வந்த போது, திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக புகார் சென்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களிடம் விசாரணை செய்து எச்சரிக்கை செய்து விட்டு சென்று விட்டனர்.
இதன் பின்னர் அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்று விட்ட பின்னர் தங்களுக்கு ஊதியம் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என பெண்கள் அச்சப்பட்டனர். இது குறித்து வேதனையுடன் கூறிய தொழிலாளர்கள், திமுகவினரை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டியதிருக்கும் என்று புலம்பியவாறு சென்றனர். இதே போன்று திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தோட்டனூத்து பகுதியில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அப்போது நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த திமுகவை சேர்ந்த சில மகளிரை வைத்து ஆரத்தி எடுப்பது போன்று செட்டப் செய்து நாடகம் நடத்தினார். இந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு ரூ.500 சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இது போன்ற காட்சிகள் இன்னும் எதிர்பார்க்கலாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த பொழப்பு எதற்கு எனவும் கேள்வி எழுப்பி சென்றதை பார்க்க முடிந்தது.