தி.மு.க.வினர் கோஷ்டி மோதல் ! - மரக்காண ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக 17 இடங்கள், விசிக 1, அதிமுக 3 பாமக 2, சுயேட்சை 3 என இடங்களை பிடித்துள்ளது.

Update: 2021-10-22 11:44 GMT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் 26 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக 17 இடங்கள், விசிக 1, அதிமுக 3 பாமக 2, சுயேட்சை 3 என இடங்களை பிடித்துள்ளது.

இந்நிலையில், மரக்காணம் ஒன்றிய தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக தயாளனை ஒன்றிய குழுத் தலைவராக தலைமை அறிவித்துள்ளது. ஆனால் எதிர்த்து அந்த கட்சியை சேர்ந்த நல்லூர் கண்ணன் போட்டியிடுவதாக அறிவித்தார்.

அதிமுக, சுயேட்சை ஆதரவோடு சுமார் 14 உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக சொல்லப்பட்டது. இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் தயாளன், அமைச்சர் மஸ்தான் உள்ளிட்டோர் மரக்காணம் ஒன்றிய அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தனர். அப்போது தயாளன் மற்றும் நெல்லூர் கண்ணன் கோஷ்டிகளுக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் இரண்டு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

Source, Image Courtesy: News 18 Tamil Nadu


Tags:    

Similar News