கழுத்தை அறுத்துருவோம்.. ஜாக்கிரதை.. தி.மு.க. அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் கழுத்தை அறுத்து போட்டுருவோம் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் "கழுத்தை அறுத்து போட்டுருவோம்" என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் திமுக கட்சியின் பொது உறுப்பினர்கள் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். இதில் அவர் பேசும்போது: இக்கூட்டம் மிக முக்கியமானது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நமது ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தொகுதியில் நமக்கு எம்.எல்.ஏ., இல்லை.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் உங்களை உள்ளாட்சி பிரதிநிதிகளா உட்கார வைக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது. அரசு கொண்டுவரும் திட்டங்கள் மக்களுக்குச் செல்ல உள்ளாட்சி பிரதிநிதிகள் நமது ஆட்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதிமுகவை சேர்ந்தவர்கள் நமது ஆட்சியில் பொறுப்பில் இருக்கக்கூடாது என்று தலைவரிடம் சொல்லிவிட்டுடோம்.
இதனிடையே செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடைபெறும். இத்தேர்தலில் தலைமை யாருக்கு சீட் வழங்கினாலும் அவர்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். துரோகம் செய்யக்கூடாது.
இத்தேர்தலில் வெற்றிபெறாமல் போனால் ஒன்றிய செயலாளர்கள் கழுத்தை அறுத்து போட்டுருவோம். ஜாக்கிரதை எனக் கூறியுள்ளார். ஒரு அமைச்சர் கழுத்தை அறுத்து போட்டுருவோம் என கூறுவது, சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவருக்கும் தெரியும்.
எனவே ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் இவ்வாறு பேசுவது கண்டிப்பாக தவறு. கட்சிக்காரர்களிடம் பேசினாலும், பொதுமக்களிடம் பேசினாலும் தவறுதான். இது பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
News Source: விகடன்
Image Courtesy: Twiter